மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் சாவு

வந்தவாசியில் மொபட்-மோட்டார் சைக்கிள் மோதலில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-03-06 21:58 IST

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோயனூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 65). இவரது மனைவி அமராவதி (60). இருவரும் மொபட்டில் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு வந்தனர்.

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் விளாங்காடு கூட்டுச்சாலை அருகே வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மொபட்டும் திடீரென மோதிக் கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த சடகோபன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்