மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி வாலிபா் சாவு

மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி வாலிபா் உயிரிழந்தாா்.;

Update:2023-07-31 00:15 IST

கடலூர் மாவட்டம், எழுத்தூர் அருகில் உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தனவேல் (வயது 27). தச்சு தொழிலாளி. இவர் தனது தந்தை, தாய் பெரியம்மா(45) ஆகியோருடன் தேவியாக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

காளசமுத்திரம் என்கிற இடத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தனவேல் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம், பெரியம்மா ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்