மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.;
தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் டேனியல்ராஜ் (வயது 24). இவர் தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளை அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தி இருந்தாராம். மீண்டும் வந்து பார்த்த போது யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.