மோட்டார்சைக்கிள் திருட்டு

மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.;

Update:2023-07-03 00:15 IST

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் மகன் பார்த்தசாரதி(வயது 22). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்