மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-07-15 16:29 IST

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் சரவணன் (வயது 27). இவர் தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த பேது, யாரோ மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மீளவிட்டான் சின்னகண்ணுபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மோகன் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மோட்டார் சைக்கிளை திருடிய மோகனை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்