முதலியப்ப அய்யனார் கோவில் குடமுழுக்கு

ஆலப்பள்ளம் முதலியப்ப அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update:2023-07-11 02:42 IST

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே ஆலம்பள்ளத்தில் முதலியப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு முதல் சாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து புனித நீர் கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை ஆலம்பள்ளம் கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்