முளைப்பாரி திருவிழா

செம்பனார்கோவில் அருகே முளைப்பாரி திருவிழா நடந்தது.

Update: 2023-03-31 18:58 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை, மேலையூர் ஆகிய கிராமங்களில் கருப்பண்ணசாமி, காளியம்மன், ஏழைகாத்தம்மன், ஊரணி அய்யனார், காசிலிங்க பைரவர், செல்வ விநாயகர் ஆகிய கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஊர் நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குடும்பநலன் காக்கவும், மத நல்லிணக்கம் வேண்டியும், மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டியும் கிராமமக்கள் தங்களது வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து கோவில்களில் வைத்தனர். தொடர்ந்து சக்திகரகம் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா புறப்பட்டது. இதை தொடர்ந்து முளைப்பாரிகளை ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் தங்களது தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் முளைப்பாரி வீதி உலா நடைபெற்றது. 2 கிலோ மீட்டர் தூரம் சென்று புத்தா குளத்தில் முளைப்பாரியை கரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்