தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டம்
தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.;
வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது.. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் அவரவர் பகுதியில் உள்ள குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினர். பின்னர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தார்.