நகராட்சி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டனர்.;

Update:2023-08-25 00:30 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணைத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான யாசர்கான் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தெருநாய்களை பிடித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனா, சேனா சர்தார், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்