முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா
அலங்காநல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா நடந்தது.;
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூரில் முனியாண்டி சுவாமி, முத்தாலம்மன், மற்றும் அய்யனார் சுவாமி, கருப்பணசுவாமி, கோவில்களில் பங்குனி திருவிழாக்கள் நடந்தது.இதில் முதல் நாள் முத்தாலம்மன் சுவாமி, முளைப்பாரிகளுடன் மேளதாளம் முழங்க கோவிலுக்கு வந்து சேர்ந்தது. மறுநாள் வாணவேடிக்கையுடன், தீவட்டி பரிவாரங்களுடன் முனியாண்டி சுவாமி நகர் வலம் வந்து கோவிலை அடைந்தது. தொடர்ந்து சகல பரிவாரங்களுடன் முத்தாலம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பூஞ்சோலை சென்றது. 3-ம் நாள் கோவிலில் கிடாய் வெட்டுதல், அன்றிரவு சுவாமி நகர் வலம் வந்து மந்தையில் எழுந்தருளியது. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.