பல்லடத்தில் 4 பேர் படுகொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம்

பல்லடத்தில் 4 பேர் படுகொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

Update: 2023-09-05 18:39 GMT

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் பூரண மதுக்கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் 4 பேரை வெட்டி கொலை செய்துள்ளது.

இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், கொலையுண்டவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கும் வகையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தரவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்