எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே வலசைபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சாத்திரை திருவிழா நடைபெற்றது. முன்னதாக மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலை மின்னொளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் மந்தையில் வைத்து வழிபாடு செய்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.