முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-05-25 18:53 GMT

கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர்-கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 11 நாட்கள் வரை நடந்தது. ஒவ்வொரு நாளும் வாணவேடிக்கைகளுடன் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருவிழாவில் பொங்கல் வழிபாடு, தேரோட்டம், தீர்த்த வாரியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை தெப்ப உற்சவம் நடந்தது. கோவிலின் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்கு, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பச்சைப்பட்டு உடுத்தி, தங்க நகைகளின் அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் புடைசூழ தெப்பத்திருவிழா நடந்தது. இளைஞர்கள் தெப்பத்தை இழுத்து சென்று 3 முறை குளத்தைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்