சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைக்கு தீ வைத்த மர்மநபர்கள்

சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைக்கு தீ வைத்த மர்மநபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-07-03 23:36 IST

கரூரில் இருந்து சின்ன ஆண்டாங்கோவில் ரோடு வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சின்ன ஆண்டாங்கோவில் ரோட்டில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டி கிடக்கிறது. இந்நிலையில் நேற்று மர்மநபர்கள் சிலர் அந்த குப்பைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட புகையால் அந்த வழியாக சென்றவர்கள் சிரமப்பட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளனார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்