தகுதிச்சான்று இல்லாமல் மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

Update:2022-12-02 00:15 IST

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தகுதிச்சான்று இல்லாத தனியார் வேன் ஒன்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் தகுதிச்சான்று புதுப்பிக்காமலும், அனுமதி சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட மேலும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இவற்றிற்கு ரூ.98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்