நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.;
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் மஞ்சள் பொடி, பலமணப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.