நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.;
குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுந்தரம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், அமுதா, செந்தில்வேலன், பாஸ்கர், ராசப்பன், குணசேகர், சீதா, அமுதவள்ளி , சக்திவேல், ரவிச்சந்திரன், மல்லிகா, பரமேஸ்வரி, வசந்தி, லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.