நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-09-30 00:37 IST

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் சசிகலா சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சூரியகுமார் கலந்துகொண்டு பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதில் பேரூராட்சி துணைத்தலைவர் தனபால், பேரூராட்சி கவுன்சிலர்கள் அனிதாஜெகதீஸ்குமார், ஜெயராமன் ஞானசேகரன், அமுதாஇளங்கோ, மஞ்சுளா, முனிகிருஷ்ணன், நதியாஜெயமணி, சிவகுமார், மகேந்திரன், பிரேமாகருணாநிதி, லட்சுமிதேவராஜ், இல.குருசேவ், விஜயகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்