நத்தம் பேரூராட்சி கூட்டம்
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது.;
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சரவணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 31 லட்சம் செலவில் மின்மயானம் அமைப்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.