நவாஸ்கனி எம்.பி. சார்பில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

நவாஸ்கனி எம்.பி. சார்பில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

Update: 2023-10-20 19:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கே.நவாஸ்கனி எம்.பி. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். தொடர்ந்து 5-வது ஆண்டாக நவாஸ்கனி எம்.பி. தனது சொந்த நிதியில் 700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் கீழக்கரை பி.எஸ்.எம். கிரான்ட் பேலசில் நடக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையேற்று விழாவை நடத்தி வைக்கிறார். அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க உள்ளனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். எம்.எல்.ஏ.க்கள் பரமக்குடி முருகேசன், திருவாடானை .கருமாணிக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு துறையினர் பங்கேற்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்