ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகள்

ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை காட்டு யானைகள் வழி மறித்தன.

Update: 2023-09-22 22:02 GMT

தாளவாடி

ஆசனூர் அருகே குட்டியுடன் வந்து வாகனங்களை காட்டு யானைகள் வழி மறித்தன.

குட்டியுடன் வந்த காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை காட்டு யானைகள் அடிக்கடி கடப்பது வழக்கம். அப்போது சாலையை கடந்து செல்லும் காட்டு யானைகள், அந்த சாலை வழியாக கரும்பு ஏற்றி செல்லும் லாரிகளை வழி மறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 3 காட்டு யானைகள் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து உள்ளன.

வாகனங்களை வழி மறித்தது

பின்னர் அந்த வழியாக கரும்பு லாரிகள் ஏதேனும் வருகிறதா என சாலையோரம் நின்றபடி காட்டு யானைகள் எதிர்பார்த்து நின்றன. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காட்டு யானைகள் வழி மறித்து கரும்பு உள்ளதா? என தேடி பார்த்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 15 நிமிடத்துக்கு பின்னர் அந்த காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. கடந்த சில நாட்களாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை யானைகள் வழி மறிக்கும் சம்பவத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்