ஆசனூர் அருகேகார்-சரக்கு வேன் மோதல்

ஆசனூர் அருகே கார்-சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது;

Update:2023-09-29 01:44 IST

ஈரோட்டில் இருந்து ஆசனூர் அருகே உள்ள கோட்டாடை கிராமத்துக்கு நேற்று மதியம் 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். ஆசனூர் சீவக்காபள்ளம் அருகே சென்றபோது கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்த சரக்கு வேனும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் கண்ணாடி உடைந்தது. மேலும் காரில் இருந்த ஈரோட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 28) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு் சிகிச்சைக்காக ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்