எருமாடு அருகே வளர்ப்பு நாயை அடித்து கொன்ற சிறுத்தை

எருமாடு அருகே வளர்ப்பு நாயை, சிறுத்தை அடித்து கொன்றது.;

Update:2023-08-18 00:15 IST

பந்தலூர்: பந்தலூர் தாலுகா எருமாடு அருகே மணல் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்குள் சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகள், தெரு நாய்கள், கோழிகளை அடித்து கொன்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த சினோய் என்பவரது வளர்ப்பு நாயை அடித்து கொன்றது.

பின்னர் இரவு முழுவதும் அப்பகுதியில் சிறுத்தை நடமாடிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரிடம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்