சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் விழாவிற்கு தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், மோர், சர்பத் போன்ற குளிர்பானங்களும் பழங்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கம்புணரி நகர செயலாளர் வாசு, வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர துணை செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணைச்செயலாளர் கருப்பையா, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் அக்ரோ தலைவர் காட்டம்பூர் முருகேசன், தெற்கு ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், சொசைட்டி தலைவர் முத்துக்குமார், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவீந்திரன், பொறியாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், சிங்கம்புணரி வார்டு செயலாளர்கள், வியாழமூர்த்தி, ராஜலட்சுமி, சரவணன், ஓவியச்செல்வன், ரவி, ராமகிருஷ்ணன், பெரியசாமி, பல்லவன், முரளி, முருகன், தேசிங்கு, தேவதாஸ், லெட்சுமணன், முகமது பிலால், சேவுரத்தினம், சேவுகமூர்த்தி, சேகர், சந்திர போஸ், பிரான்மலை சந்திரன், மகளிர் அணி ராஜலட்சுமி, எழிலரசி, முருகேஸ்வரி மற்றும் சிங்கம்புணரி ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.