வள்ளியூர்-கேசவநேரி இடையே புதிய பஸ் சேவை; சபாநாயகர் தொடங்கி வைத்தார்

வள்ளியூர்-கேசவநேரி இடையே புதிய பஸ் சேவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.;

Update:2023-08-22 00:27 IST

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே கேசவநேரி கிராமத்தில் இருந்து வள்ளியூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

இதையடுத்து கேசவனேரியில் இருந்து வள்ளியூருக்கு புதிய பஸ் சேவையை சபாநாயகர் அப்பாவு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பஸ்சில் மாணவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து வள்ளியூருக்கு பயணித்தார். அப்போது கண்டக்டரிடம் ரூ.500 வழங்கிய சபாநாயகர் அப்பாவு பஸ்சில் பயணிக்கும் அனைவருக்கும் உரிய டிக்கெட்டை வழங்கி விடுமாறு கூறினார்.

வள்ளியூரில் இருந்து தினமும் காலை, மாலையில் கேசவநேரிக்கு டவுன் பஸ் வந்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்