முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.;
காரைக்குடி
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி, பங்குனி திருவிழாவையொட்டி அகமுடையார் சமுதாய மண்டகப்படி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். அய்யப்பாசெல்வராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் அமுதா, சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தேவிமீனாள், மூவேந்தர் பண்பாட்டு கழக நகர செயலாளர் பஞ்சாட்சரம், பொருளாளர் வடிவேலு, ஆசிரியர் மெய்யப்பன், அழகப்பா பல்கலைக்கழக சுரேஷ்ராஜன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராமதாஸ்மோகன், ஓய்வு பெற்ற தாசில்தார் ஜான்சிராணி, சேகர், சிவா, விஸ்வநாதன், விக்னேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.