நீலகிரி: மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து
தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.;
கோப்புப்படம்
கோவை,
நீலகிரி மலை ரெயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் நேற்று முன்தினம் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், மழை காரணமாக சீரமைப்பு பணிகள் தாமதமாகின. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.