வடமதுரை சார்பதிவாளா் அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு

வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்தது;

Update:2022-08-31 23:08 IST

வடமதுரையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இன்று விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டி இருந்தது. இந்நிலையில் இன்று மாலை அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் சென்று பத்திர கோப்புகள் வைக்கும் அறையில் பதுங்கி இருந்த 7 அடி நீள சாரைப்பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்