வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூட்டு பெரி. இவரது மனைவி பனிதா பெர்கரா(வயது 22). இவர்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பனிதா பெர்கரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 மாதங்களில் அவர் உயிரிழந்து உள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.