கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபர் கைது

கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-11 00:15 IST


சரவணம்பட்டி

கோவில்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கோவில்பாளையம் போலீசார் சொரியம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா கேவட் என்பவரது மகன் பின்டு கேவட் (வயது25) என்பவரை போலீசார் மடக்கி பிடித்த னர்.

அவரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்டு கேவட்டை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்