கொன்னம்பட்டியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

வேடசந்தூர் அருகே கொன்னம்பட்டியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-04 17:04 GMT

வேடசந்தூர் அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.எஸ். வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர்கள் சார்பில் கொன்னாம்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

முகாம் தொடக்க விழாவில் நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் தங்கவேல், துணைத்தலைவர் தாரணி கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் ஈஸ்வரி, ஊர் தலைவர்கள் காளிமுத்து, நல்லுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 6 நாட்கள் நடைபெறும் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நலப்பணிகள் நடைபெறுகிறது.

அதன்படி, இன்று கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் வேலவன், சகுந்தலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை டாக்டர் தேன்மொழி, கால்நடை ஆய்வாளர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் பங்களிப்புடன் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில், கால்நடை வளர்ப்போர் தங்களது மாடு, ஆடு, கோழிகளை கொண்டு வந்து சிகிச்சை அளித்து பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்