எண்ணும் எழுத்தும் பிரசார இயக்கம்
புளியங்குடியில் எண்ணும் எழுத்தும் பிரசார இயக்கம் நடைபெற்றது.;
புளியங்குடி:
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் பிரசார வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி புளியங்குடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பரமானந்தா நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். பள்ளி செயலாளர் ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியை செல்வசுகுணா, எண்ணும் எழுத்தும் இயக்க கருத்தாளர் இந்திராணி, ஆசிரியை சுபா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.