ஊட்டச்சத்து உணவு திருவிழா

கூடலூர் அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது.

Update: 2023-09-28 20:30 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதத்தையொட்டி உணவு திருவிழா கூடலூர் அரசு கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் ரகுவரன், அஜித், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ராபியா ஆகியோர் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து ஊட்டசத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக பேராசிரியர் மகேஷ் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பொற்கோ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்