புகழூர் நகர கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புகழூர் நகர கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடைபெற்றது.

Update: 2022-06-11 18:03 GMT

நொய்யல்,

புகழூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 10-ந்தேதி முதல் அனைத்து கடைகளிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும், கடைகளில் விற்பனை செய்யப்படுவதற்கும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 30 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகழூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நகராட்சித் தலைவர் சேகர் என்ற குணசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையர் கனிராஜ், துணைத்தலைவர் பிரதாபன் கொண்ட குழுவினர் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்குவதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் 2 பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வழங்கினர். மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்