ஆற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

மணல்மேடு அருகே ஆற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.;

Update:2023-08-12 00:30 IST

மணல்மேடு;

சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது60). கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார்குடி அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு முத்துராமலிங்கமும், அவரது மனைவி சாந்தியும் சென்றதாக தெரிகிறது. அங்கிருந்து நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் மட்டும் செம்பதனிருப்பு கிராமத்துக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துராமலிங்கம், மணல்மேடு அருகே சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அவரது மனைவி சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துராமலிங்கத்தின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்