குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-03-02 00:18 IST

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் சந்தனமரியான் (வயது 70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று சிந்தாமணி குளத்தின் கரையில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கிடந்தது. அப்போது, அங்கு குளத்தில் மூழ்கி சந்தனமரியான் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்