தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.;

Update:2023-04-09 02:30 IST


மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 83). சம்பவத்தன்று இவரை காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது சுப்பிரமணி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்