குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி;

Update:2023-01-10 02:50 IST

மேலகிருஷ்ணன்புதூர்:

புத்தளம் அருேக உள்ள உசரவிளையை ேசர்ந்தவர் தாசன் (வயது 68). இவரது மனைவியும், மகனும் கேரளாவில் வசித்து வருகிறார்கள். தாசன் புத்தளம் பகுதியில் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பறக்கை குளத்தில் குளிக்க சென்றார். அங்கு படித்துறையில் குளிக்க இறங்கிய போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நேற்று காலையில் குளத்தில் குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் தாசன் பிணமாக மிதப்பதை கண்டு சுசீந்திரம் போலீஸ் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பிணத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்