மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மெஞ்ஞானபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.;
மெஞ்ஞானபுரம்:
விளாத்திகுளம் தாலுகா, தங்கம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்(வயது 64). இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளுடன் நாசரேத் அருகே தைலாபுரம் எடைமேடைக்கு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே முதலூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கிங்ஸிலி (20) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் சந்தான கிருஷ்ணன் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த சந்தானகிருஷ்ணன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போனார்.