நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிணமாக கிடந்த முதியவர்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.;

Update:2022-12-18 01:02 IST

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மின்சார அறையில் மருத்துவமனை ஊழியர் மின் வினியோகத்தை சரி செய்வதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் சென்று பார்த்த போது முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலசுப்பிரமணியன் என்பதும், கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி சிகிச்சைக்காக சேர்ந்து காணாமல் போனவர் என்பதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்