விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது
செஞ்சி அருகே விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது;
செஞ்சி
செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை என்ற ஊரை சேர்ந்தவர் தர்மராஜா(வயது 75) விவசாயி. திருமணம் ஆகாத இவருக்கும் அதே ஊரை சேர்ந்த செங்கேணி மகன் ரங்கநாதன்(62) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ரங்கநாதன் நிலத்தில் ஏர் ஓட்டும் போது அங்கு வந்த தர்மராஜா ஏன் எனது வரப்பில் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட்டதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ரங்கநாதன் மற்றும் அவரது மனைவிகள் வசந்தா, விருத்தம்பால் ஆகியோர் சேர்ந்து தர்மராஜாவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ரங்கநாதன் மற்றும் அவரது மனைவிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் வல்லம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த ரங்கநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.