ரெயில் மோதி ஒருவர் பலி

ரெயில் மோதி ஒருவர் இறந்தார்.;

Update:2023-03-07 00:15 IST

சேரன்மாதேவி ரெயில் நிலையம் வழியாக தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மதியம் மாற்று ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சேரன்மாதேவி ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது ரெயில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்