சிதம்பரம் உரக்கடைக்காரர் தற்கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிதம்பரம் உரக்கடைக்காரர் தற்கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-08 21:01 GMT


சிதம்பரம், 

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ் (வயது 45). இவர் சிதம்பரம் பொய்யாப்பிள்ளைசாவடி புறவழிச்சாலை அருகே உரக்கடை வைத்து நடத்தி வந்தார். கடன் பிரச்சினை, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கணேஷ் தனது மனைவி பிரபாவதி(32), மகள் சங்கமித்ரா(11), மகன் குருசரண்(9) ஆகியோருக்கு விஷத்தை கொடுத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபாவதி மற்றும் 2 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வந்தனர். கணேஷ் தற்கொலைக்கு முன்பாக தனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த பதிவில் எனது சாவுக்கு சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செங்குட்டுவன் உள்ளிட்ட சிலர் தான் காரணம் என கூறியிருந்தார். அதன்அடிப்படையில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கணேசை தற்கொலைக்கு தூண்டியதாக செங்குட்டுவன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நேசன்(40) ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய தச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன்(52) என்பவரை புதுச்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருவதோடு, மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களையும் தேடி வருகிறார்கள்.இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சங்கமித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்