வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழா

கீழக்கடையம் பஞ்சாயத்தில் வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழா நடந்தது.

Update: 2022-05-23 16:44 GMT

கடையம்:

தமிழகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி கீழக்கடையத்தில் நடைபெற்ற விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் முன்னிலை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், கவுன்சிலர் புளி கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், காய்கறி விதைகள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது. கீழக்கடையம் கவுன்சிலர் ரம்யா ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் தீபா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்