இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார்- மருது அழகுராஜ்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார் என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Update: 2023-02-06 09:23 GMT

சென்னை,

ஓபிஎஸ் பின்வாங்கியதாக அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்.. எங்களை அதிமுகவில் இருந்து அழித்துவிட வேண்டும் என்பவரின் கருத்து அப்படி தான் இருக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஓ பன்னீர் செல்வம் பின்வாங்கியதாக அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்.எங்களை அதிமுகவில் இருந்து அழித்துவிட வேண்டும் என்பவரின் கருத்து அப்படி தான் இருக்கும். தன்னால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார். இரட்டை இலைக்கு எதிராகப் போட்டியிடக் கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். தன்னலத்தை விடக் கட்சியின் நலனை பெரியதாக அவர் கருதுகிறார். அரசியலை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று நினைப்பவர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஈரோடு மக்கள் நிச்சயம் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

இதை எல்லாம் தொண்டர்களும் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் இப்போது ஈரோடு கிழக்கு என்ற ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் மட்டுமே நடக்கிறது. மீதமுள்ள 233 தொகுதிகளில் தேர்தல் இல்லை.. மக்கள் இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் " என்று அவர் தெரிவித்தார்

Tags:    
Show comments

மேலும் செய்திகள்