பொங்கலை அடுத்து வரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு

18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2024-01-12 00:09 IST
பொங்கலை அடுத்து வரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு

கோப்புப்படம்

சென்னை,

தைப்பொங்கலை (15.1.2024) அடுத்து வரும் நாட்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் வரும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்