'நம் குப்பை நம் பொறுப்பு' விழிப்புணர்வு பேரணி
நாடுகாணியில் ‘நம் குப்பை நம் பொறுப்பு’ விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
கூடலூர்
நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், கூடலூர் அரசு கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில், நம் குப்பை நம் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நாடுகாணியில் நடைபெற்றது. பேரணி நாடுகாணி பஜாரில் தொடங்கி அஞ்சல் அலுவலக பகுதிக்கு சென்று மீண்டும் நாடுகாணி பகுதிக்கு வந்தது. உதவி பேராசிரியர் மகேஷ்வரன், அரசு கல்லூரி இந்திய செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் செல்வகுமார், நகராட்சி அலுவலர் கார்த்திக் மற்றும் தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அலுவலர் பிரகாஷ் செய்திருந்தார். முன்னதாக உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.