பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் -சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பாபநாசம் வன சோதனைச்சாவடி முன்பாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2024-04-22 03:53 GMT

நெல்லை,  

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

தற்போது கோடையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வார விடுமுறை தினமான நேற்று அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கார், வேன்களில் குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்