காவடி எடுத்து புறப்பட்ட பாதயாத்திரை குழு

காவடி எடுத்து புறப்பட்ட பாதயாத்திரை குழு;

Update:2023-03-09 00:15 IST

நெகமம்

நெகமத்தை அடுத்த வடசித்தூரில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச்செல்லும் விழா, வடசித்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட காவடிகள் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கிருந்து காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பழனியை நோக்கி புறப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். வடசித்தூர், காட்டம்பட்டி, அரசூர், பெதப்பம்பட்டி, துங்காவி, மடத்துக்குளம் வழியாக பாதயாத்திரையாக செல்லும் அவர்களுக்கு செல்லும் வழியில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பழனியில் வருகிற நாளை(வெள்ளிக்கிழமை) சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் வடசித்தூர் முருகன் கோவிலுக்கு வந்து அடைவார்கள். பின்னர் அன்றைய தினம் இரவில் வடசித்தூர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்