அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து வேலூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.;
நீடாமங்கலம்:-
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு பாமணி, ராஜகோபாலபுரம், அரவத்தூர், மூவாநல்லூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் 158 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் அடுக்கி வைத்தனர். இதையடுத்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு புறப்பட்டு சென்றது.